/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர்களை கவுரவித்த ஆசிரியர்கள்
/
மாணவர்களை கவுரவித்த ஆசிரியர்கள்
ADDED : ஏப் 06, 2025 06:29 AM

கோபால்பட்டி : கே.அய்யாபட்டி அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்த கவுரவித்த ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
கே.அய்யாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா, கல்வியில் சிறந்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா, கலைத்திருவிழாவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாணவர் சேர்க்கை முனைப்பு இயக்கத்தினை திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி துவக்கி வைத்தார்.
பள்ளி முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட 10 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். தலைமை ஆசிரியர் வின்சென்ட்பால்ராஜ் வரவேற்றார். மாணவர்களுக்கும் பரிசும் வழங்கப்பட்டது.
வட்டாரக் கல்வி அலவலர் முத்தம்மாள், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சசிகலா, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சுரேஷ், தமிழரசி கார்த்திகைச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் அன்பழகன், ஞானகுருசாமி,கிருஷ்ணன் பங்கேற்றனர். ஆசிரியர் கார்த்திகேயன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.

