/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழில்நுட்ப விழிப்புணர்வு அவசியம்; நிலக்கோட்டை மகளிர் கல்லூரி முதல்வர் அறிவுறுத்தல்

ADDED : மார் 01, 2024 06:23 AM
நிலக்கோட்டை : ''இளம் தலைமுறையினருக்கு தொழில்நுட்ப விழிப்புணர்வு அவசியம்'' என நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் சீனிவாசன் பேசினார்.
இந்த கல்லுாரியில் நடந்த தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியதாவது: இந்தியாவில் 30 சதவீத மக்கள் மட்டுமே விவசாயம் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். எஞ்சிய 70 சதவீதத்தினர் தொழில்நுட்ப பணிகளையே நம்பி உள்ளனர். தற்போதைய சூழலில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம். உலகின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை கையாள முற்பட வேண்டும். தொழில்நுட்பத்தை அதிக அளவு பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும்,என்றார். தொழில்நுட்ப நிர்வாகவியல் துறை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
தனியார் நிறுவன தொழில் நுட்ப துணைத் தலைவர் முருகேசன், பேராசிரியர் லதா, பயிற்சித் திட்ட அமைப்பு செயலாளர்கள் திலீபன், கார்த்திகேயன் பங்கேற்றனர். திட்ட பொறுப்பாளர் சுபஸ்ரீ நன்றி கூறினார்.