/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு சிறை
ADDED : டிச 07, 2024 06:45 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பள்ளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒட்டன்சத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஸ்வநாதன்22. 2020ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமியை காதலித்தார்.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விஸ்வநாதனை போக்சோவில் கைது செய்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
விஸ்வநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானர்.