/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் காளை இறப்பு-கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி
/
கோயில் காளை இறப்பு-கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி
ADDED : டிச 07, 2024 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் எம்.ஜி.ஆர்., நகர் அரண்மனை சந்தன கருப்பு சுவாமி கோயிலுக்கு சொந்தமான காளை உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தது.
இதைதொடர்ந்து காளை கோவில் முன்பு வைக்கப்பட்டு மாலை சந்தனம், ஜவ்வாது, வேட்டி, துண்டுகள் அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.இந்த கோயில் மாடானது பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசு என பல்வேறு பரிசு பொருட்களை வென்றது குறிப்பிடதக்கது . காளையானது கோயிலின் அருகிலே மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.