ADDED : நவ 24, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை பால்கேணி மேடு செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி புனித நீரூற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
வடமதுரை பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். மக்கள் திரளாக பங்கேற்றனர்.

