ADDED : ஆக 23, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரை பாகாநத்தத்தில் 18 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
நேற்று முன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்தது. பின் நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. குண்டாம்பட்டி ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வர் கோயில் அர்ச்சகர் சுப்பிரமணி குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். சுற்று வட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
