ADDED : செப் 07, 2026 11:35 PM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி, செப்.8-
தாண்டிக்குடி பட்லங்காடு பகுதியில் மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பரிவார தெய்வங்களான விநாயகர், மாரியம்மன், கரியமால், நவக்கிரக சன்னதிகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜை நடந்தது. கிராம தெய்வங்களுக்கு கனி வைத்து தீர்த்தம் வைத்தல், முளைப்பாரி அழைத்தல், வேதா அனுக்ஞை, வருண வழிபாடு, ரக் ஷா பந்தனம், வேதபாராயணம், பிம்ப சக்தி, ஸ்பரிஷா ஹூதி, கோ பூஜையுடன் கலசங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
