ADDED : பிப் 22, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : சிக்கனம்பட்டி சித்தி விநாயகர், மகா காளியம்மன், முனியப்பசாமி, மண்டுசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கணபதி ஹோமம், கோபூஜை, கன்னி பூஜை, மூலிகை வேள்வியுடன் 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.