ADDED : டிச 22, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் களர்பட்டி சக்திவிநாயகர், மகாகாளியம்மன், மகாமுத்துமாரியம்மன், முன்னடி கருப்பணசுவாமி, சீதா ராமர், ஆஞ்சநேயர், காசி விஸ்வநாதர், கால பைரவர் கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த 2013ல் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதால் ஊர் மக்கள் திருப்பணி செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டு பணி துவக்கமாக பாலாலய பூஜை நடந்தது. பூஜையை அர்ச்சகர்கள் ரங்கராஜ், சீனிவாசன் தலைமையிலான குழுவினர் செய்தனர்.

