ADDED : நவ 25, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் அமைப்பின் மாநில செயற்குழு,திண்டுக்கல் மண்டல பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடந்தது.
மாநில துணைத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். காப்பாளர் செல்லமுத்தையா, செயலாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் பங்கேற்றார். கோயில்களில் 3 ஆண்டுகள் தினக்கூலியாக பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ள கோயில்களை தரம் உயர்த்த வேண்டும். பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முதுநிலை தொழிலாளர்களுக்கான சம்பளம் வேண்டும். மாத உதவித்தொகை ரூ.7,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.