ADDED : ஆக 21, 2025 08:26 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காலையில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம், காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி - வி.ஐ.பி., நகர் ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி , ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உட்பட அனைத்து சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயிலில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது.விருப்பாச்சி தலையயூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் 16 வகையான அபிஷேகங்களுடன் பூஜைகள் நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில்தீபாராதனை நடந்தது.
வடமதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், வீபதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
பழநி : மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பிரதோஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
கன்னிவாடி: சோமலிங்க சுவாமி கோயிலில் மூலவர், ஓம்கார நந்திக்கு அபிஷேகம் ,சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலிலும் பிரதோஷ அபிஷேகம் நடந்தது.

