நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: கீழக்கோட்டை பகுதியில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்தாலம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கோயில்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழுக்கு மரம் ஏறுதல், சிறப்பு வழிபாடுகளுடன் திருவிழா நடப்பது வழக்கம்.கட்டட சேதத்தால் முத்தாலம்மன் கோயிலை புதுப்பிக்க நிர்வாககுழு முடிவு செய்தது.
அம்மன் உத்தரவு பெறுதல் சமீபத்தில் நடந்தது. இதை தொடர்ந்து பாலாலய பூஜை நடந்தது. கோயில் தலைவர் ஜமீன்தார், திருப்பணி குழு தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.