/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்த தேவை முனையங்கள்
/
ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்த தேவை முனையங்கள்
ADDED : ஜூன் 11, 2025 05:48 AM

பழநி : பழநியில் ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்தி ஆட்டோ முனையங்களை ஏற்படுத்தபலரும் எதிர்பார்க்கின்றனர்.
பழநி வரும் வெளியூர் பக்தர்கள் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கோயிலுக்கு செல்ல ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்தப்படாததால் பக்தர்களுக்கும், ஆட்டோ டிரைவர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதனால் பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆட்டோ டிரைவர்களும் சிரமம் அடைகின்றனர். பழநி வரும் பக்தர்கள் கிரி வீதி வரை செல்ல அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு,கொடைக்கானல் ரோடு, அருள்ஜோதி வீதி, சுற்றுலா பஸ் ஸ்டாண்ட், கிழக்கு கிரி வீதிக்கு ஆட்டோ மூலம் செல்கின்றனர்.
துாரத்தைப் பொறுத்து ரூ.நுாறு முதல் கட்டணம் நிர்ணயம் செய்கின்றனர். பக்தர்களுடன் பேரம் பேசும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் ஆட்டோக்களை தவிர்த்து நடந்து செல்கின்றனர்.
இதோடு பக்தர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்குகட்டுப்படியான தொகை கிடைக்காததால் மன சிரமத்திற்கு உள்ளாகின்றனர். போக்குவரத்து துறை, போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முறைப்படுத்த வேண்டும்
வைரமுத்து, பா.ம.க., திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயலாளர், பழநி:ஆட்டோ டிரைவர்கள், குதிரை வண்டி ஓட்டுநர்கள் பக்தர்களின் வருகையை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இதை கருதி ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
இதிலும் சிலர் அதிககட்டணம் வசூலிக்கின்றனர். இதனை முறைப்படுத்த வேண்டும். மேலும் ஆட்டோ டிரைவர்கள் பேட்ச், உரியஎப்.சி., யூனிபார்ம் அணிந்து செயல்பட வேண்டும். இதனை போக்குவரத்து துறையினர் கண்காணிக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை வேண்டும்
கோபிநாதன், ஆடிட்டர், பழநி:விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்களில் பழநி அடிவாரம் பகுதிகளுக்கு அதிக பக்தர்கள்வருகின்றனர்.
இவர்களை ஆட்டோ டிரைவர்கள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஏற்றிச் செல்லும் போது கட்டணம் நிர்ணயம் செய்வதில் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த சரியான ஆட்டோ கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து ஆட்டோ ஓட்டுநர்கள், பக்தர்கள் பாதிப்படையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.