/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தை அமாவாசை,வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு
/
தை அமாவாசை,வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு
ADDED : ஜன 29, 2025 05:43 AM
திண்டுக்கல் : தை அமாவாசை,வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மல்லிகைப்பூ கிலோ ரூ2,500 க்கு விற்பனையானது.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுப் பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, ரெட்டியார்சத்திரம், வடமதுரை, ஆத்துார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பூக்கள் வரத்தை பொறுத்து நாள்தோறும் விலைகள் நிர்ணயிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் 2 மாதங்களூக்கு மேலாக பனிப்பொழிவு இருந்து வருகிறது. மார்கழி முடிந்த நிலையிலும் பனிபொழிவு நீடிக்கிறது. இதனால் செடியிலே பூக்கள் கருகும் சூழல் உள்ளதால் வரத்து பாதியாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் இன்று நடக்கும் தை அமாவாசையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
வரத்தும் குறைவாக உள்ளதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிலோ மல்லிகை ரூ. 2500, முல்லை ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1300, கனகாம்பரம் ரூ.1000, காக்கரட்டான் ரூ.700, பட்டன் ரோஸ் ரூ.180, சம்பங்கி ரூ.100, அரளி ரூ.200க்கு விற்பனையானது.