/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் நவ.,7ல் தங்கரத புறப்பாடு நிறுத்தம்
/
பழநி கோயிலில் நவ.,7ல் தங்கரத புறப்பாடு நிறுத்தம்
ADDED : நவ 02, 2024 02:33 AM

பழநி:பழநி முருகன் கோயில் கந்தசஷ்டி விழா இன்று மதியம் காப்பு கட்டுதலுடன் துவங்கும் நிலையில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.,7ல் நடக்கிறது. அன்று அதிகாலை 4:00 மணிக்கு முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு விளாபூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிகாலபூஜை, மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது.
மதியம் 3:10 மணிக்கு பராசக்தி வேல்வாங்குதல் நிகழ்ச்சிக்கு பின் சன்னதி அடைக்கப்படுகிறது. சுவாமி அடிவாரம் கிரிவீதி வர மாலை 6:00 மணிக்கு கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
பின் சுவாமி கோயிலுக்கு திரும்ப வழக்கப்படி சம்ப்ரோக் ஷண பூஜை நடைபெற்று இராக்கால பூஜை நடைபெறும். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நவ.,7 காலை 11.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள். அன்று இரவு தங்கரத புறப்பாடும் நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குவிந்த பக்தர்கள்2 மணி நேரம் காத்திருப்பு
நேற்று பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். ரோப் கார் சேவை இல்லாததால் வின்சில் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். வின்சில் முன்னுரிமை கோரி பலர் வெளியே வரும் வாயிலில் நின்றிருந்தனர். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு வின்ச் வரிசையில் முன்னுரிமை வழங்கப்பட்டது.
கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் பொது, கட்டண வரிசையில் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் தனி வழி மூலம் அனுமதிக்கப்பட்டனர்.

