/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீர்நிலைகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் பேராபத்து! கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகங்கள்

ADDED : ஜூலை 19, 2024 05:38 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சிகள் கட்டுப்பாட்டில் 300க்கு மேற்பட்ட கண்மாய்கள், ஊருணிகள், ஓடைகள் உள்ளன. இவற்றை மழைக்காலத்திற்கு முன்பே துார்வாரினால்தான் தண்ணீர் நிரப்புவதற்கு வசதியாக இருக்கும். ஆனால் கண்மாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நீரும் மாசுபடுகிறது.
இதனை கவனிக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்களோ கண்டு கொள்வதே இல்லை.நீர் வரத்து வழியான ஓடைகளை பிளாஸ்டிக், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு நீர்வழிப் பாதையும் அடைபட்டு கிடக்கின்றன.
இவ்வாறு அடைப்பட்டு கிடக்கும் பாதைகளை சரி செய்து மழை தண்ணீர் உரிய இடங்களுக்கு செல்வதை பொதுப்பணித்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகள், நீர் பாதைகளில் கோலி, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான அபராதம் விதித்து துாய்மை காத்திட மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.