/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'அக்ரி ஸ்டேக்' திட்டம் தொடங்கியது
/
'அக்ரி ஸ்டேக்' திட்டம் தொடங்கியது
ADDED : பிப் 11, 2025 05:38 AM
திண்டுக்கல்: மத்திய, மாநில அரசுகள் சார்பில் விவசாயிகள் தொடர்பான அனைத்து தரவுகளையும் ஒருங்கிணைப்பதற்கான 'அக்ரி ஸ்டேக்' தொடங்கியது.
இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும், 'அக்ரி ஸ்டேக்' திட்டத்தின்படி ஆதார் போல் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு தனி குறியீட்டு எண் வழங்கப்படும்.
விவசாயிக்கு சொந்தமான நிலம், அவர் பயன்படுத்திய அரசு திட்டங்கள் உள்ளிட்ட விபரங்கள், ஒரே இடத்தில் சேமிக்கப்படும். நிமிட நேரத்தில் இந்த தகவல்களை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்யலாம்.
அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள், அவர்களுக்கு சொந்தமான நிலப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் 'அக்ரி ஸ்டேக்' என இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
இதற்கான பணிகள் வேளாண்மை, தோட்டக்கலை, மக்கள் நலப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
அனைத்து வட்டாரங்கள், அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் வைத்து இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயம் சார்ந்த மானியத் திட்டங்கள், சேவைகளை, இந்த தனித்துவமான அடையாள எண் மூலமாக மட்டுமே பெற முடியும்.
விவசாயிகள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணி அனைத்து நாள்களிலும் நடைபெறுகிறது.

