/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொப்பம்பட்டியில் மாட்டுத்தாவணி காங்கேயம், லம்பாடி மாடுகள் வருகை
/
தொப்பம்பட்டியில் மாட்டுத்தாவணி காங்கேயம், லம்பாடி மாடுகள் வருகை
தொப்பம்பட்டியில் மாட்டுத்தாவணி காங்கேயம், லம்பாடி மாடுகள் வருகை
தொப்பம்பட்டியில் மாட்டுத்தாவணி காங்கேயம், லம்பாடி மாடுகள் வருகை
ADDED : ஆக 05, 2025 04:32 AM

தொப்பம்பட்டி : பழநி அருகே தொப்பம்பட்டியல் அங்காளம்மன் கோயில் 63 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டுத்தாவணியில் காங்கேயம், ஈரோடு, சேலம், திருப்பூர், ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, உடுமலை, கிணத்துக் கடவு,கோவை, குண்டடம் பகுதியில் இருந்து மாடுகள் வரவழைக்கப்பட்டன.
ஆக.2ல் துவங்கி இன்று (ஆக.5) நிறைவு பெற உள்ள மாட்டுத்தாவணியில் காங்கேயம், லம்பாடி உள்ளிட்ட நாட்டு மாடுகள் ,உழவு மாடுகள், கறவை மாடுகள், இளங்கன்றுகள் விற்பனைக்கு வந்தன. மாடுகளுக்கு தேவையான தும்பு, கயிறு, மூக்கணாங்கயிறு, உள்ளிட்ட பொருட்களும் விற்பனையாகின. உள்ளூர், வெளி மாநில, வெளியூர் வியாபாரிகள் மாடுகளை வாங்க திரண்டனர்.
மாட்டு சந்தைக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.