sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மனிதகுலத்தை சிறப்பாக்கும் மனவளக்கலை மாணவர்களை நல்வழிபடுத்தும் நன்னடத்தை

/

மனிதகுலத்தை சிறப்பாக்கும் மனவளக்கலை மாணவர்களை நல்வழிபடுத்தும் நன்னடத்தை

மனிதகுலத்தை சிறப்பாக்கும் மனவளக்கலை மாணவர்களை நல்வழிபடுத்தும் நன்னடத்தை

மனிதகுலத்தை சிறப்பாக்கும் மனவளக்கலை மாணவர்களை நல்வழிபடுத்தும் நன்னடத்தை


ADDED : ஜூன் 01, 2025 04:00 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: உடல்நலம், அறிவு, அறநெறி,நற்பண்புகள் இவற்றை சீர்படுத்தி ஒவ்வொரு மனிதனையும் உடல் நலத்துடனும், நற்பண்புகளுடனும் மாற்றியமைத்துக் கொள்வதற்கான பயிற்சிக்களமாக திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் திகழ்கிறது. திண்டுக்கல் வேதாத்திரி நகரில் மனவளக்கலை அறக்கட்டளை துவக்கப்பட்டு உருவான அறிவுத்திருக்கோயில் வேதாத்திரி மகரிஷியால் திறந்து வைக்கப்பட்டு 31 ஆண்டுகளாகின்றன. அதன் ஆண்டுவிழா நேற்று நடந்தது. மனவளக்கலை பயற்சி பெற்றவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விழாவில் உணர்ச்சி மிகுந்த அனுபத்தை வெளிப்படுத்தினர்.

மனிதகுலம் சிறப்பாக பயிற்சி


தாமோதரன், நிர்வாக அறங்காவலர், அறிவுத்திருக்கோயில்: யோகம் என்றாலே மனதை இறைநிலையோடு இணைத்தல் என்பது பொருள். அவ்வாறு இணைப்புப் பெறுவதற்கு ஆன்மாவானது துாய்மை பெற வேண்டும். மனிதகுலம் சிறப்பாக வாழ்வதற்கு மனவளக்கலைப் பயிற்சிகளை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்து அளித்துள்ளார். உலகம் முழுவதும் 19,800 மனவளக்கலை ஆசிரியர்கள், 2500க்கு மேற்பட்ட மையங்கள் மூலம் இக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தாண்டு 1600 கல்லுாரி, 3550 பள்ளி மாணவர்களுக்கும் ,1525 பொதுமக்களுக்கும் மனவளக்கலைப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நினைவாற்றல் அதிகரிப்பு


மலர்விழி, முதல்வர், வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளி: வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளியின் குறிக்கோளாக மாணவர்களின் திறன் மேம்படுவதற்காக உடற்பயிற்சியும், மனவளக்கலை மூலம் தியானப்பயிற்சியுமும், மூச்சிப் பயிற்சியின் மூலம் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறோம். மழலையர் முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தினமும் மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை மாணவர்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் சுவாச பிரச்னைகள் தீர்ந்து நினைவாற்றல் அதிகரிப்பதாகவும், முன்பை விட தற்போது அதிக மதிப்பெண்கள் பெறுவதாகவும், பெற்றோரிடம் நன்னடத்தையுடன் நடந்து கொள்வதாக பெற்றோர்கள் மூலம் தெரிந்து கொண்டோம்.

எண்ணற்ற நன்மைகள்


பூங்குன்றன், இயக்குநர், மதர் தெரசா கல்வி நிறுவனம், இழுப்பூர் : உலக சமுதாய சேவா சங்கத்தின் முதன்மையான அறிவுத்திருக்கோயில்களில் ஒன்றான திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் மனித குலத்திற்கு எண்ணற்ற நன்மைகளை செய்து வருகிறது. மனவளக்கலை ஆசிரியர்களை உருவாக்கும் மையமாகவும் இது திகழ்கிறது. இக்கோயில் தனது 31 வது ஆண்டில் அடியெடுத்து வைத்து சேவைகளை தொடர்கிறது. இயேசு, நபிகள் நாயகம், புத்தர் தொடங்கி பலரை பற்றி அவர்களின் சீடர்கள்தான் உலகறிய வைத்துள்ளனர். அதேபோல் வேதாத்திரி மகரிஷியும் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டனர். அதேபோல் வேதாத்திரி மகரிஷியை பின்பற்றும் நம் உயரம் என்ன, எவ்வாறு எடுத்து செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அகத்தாய்வு பயற்சிக்கு திட்டம்


டாக்டர் ராகுல்ரமேஷ், அரவிந்த கண் மருத்துவமனை, திண்டுக்கல் : அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் பணியாளர்களுக்கு மனவளக்கலை பயிற்சி தரப்படுகிறது. இப்பயிற்சியினால் பணியாளர்கள் நோயாளிகளை அணுகும் முறையில் மாற்றம் வந்துள்ளது. அவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் பாவித்து சிகிச்சை அளிக்கின்றனர். அதேபோல் உட்ற்பயிற்சி, காயகல்ப பயிற்சினை தினமும் செய்யும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் பணிபுரிகின்றனர். நட்பு நலம் அதிகரித்துள்ளது. மனவளக்கலையினால் குடும்ப அமைதியுடன் வாழ்வதை எங்கள் பணியாளர்கள் மகிழ்வுடன் அனுபவமாக கூறுகின்றனர். தொடர்ந்து அகத்தாய்வு பயற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

கர்ப்பிணிகளுக்கு யோகா


பழனிச்சாமி, செயலர், அறிவுத்திருக்கோயில், திண்டுக்கல் : திண்டுக்கல் மன்றம் மூலமாக வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையை கற்றதால் பொதுமக்கள், மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்வில் மேன்மையடைந்துள்ளனர். ஆண்டு முழுவதும் மனவளக்கலையான உடல், மன நலம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன அழுத்த மேலாண்மை, கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சி, ேஹாமியோ மருத்துவ முகாம் இங்கு நடைபெறுகிறது. இன்றைய தினம் சமுதாயத்தில் நிலவும் உளவியல் சார்ந்த பிரச்னைகளை தீர்க்கும் வகையில் இங்கு தரும் உடற்பயிற்சி உதவுகிறது.






      Dinamalar
      Follow us