/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டில் போல்ட் கழன்று கம்பி நசுக்கி தந்தை, மகன் பலி
/
கட்டில் போல்ட் கழன்று கம்பி நசுக்கி தந்தை, மகன் பலி
கட்டில் போல்ட் கழன்று கம்பி நசுக்கி தந்தை, மகன் பலி
கட்டில் போல்ட் கழன்று கம்பி நசுக்கி தந்தை, மகன் பலி
ADDED : நவ 04, 2024 11:18 PM

சாணார்பட்டி; திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே இரும்பு கட்டில் போல்ட் கழன்று தலைமாட்டில் இருந்த தடுப்பு கம்பி கழுத்தில் நசுக்கியதில் தந்தை, மகன் பலியாகினர்.
சாணார்பட்டியை சேர்ந்தவர் டெய்லர் கோபிக்கண்ணன் 35. மனைவி யோகேஸ்வரி 32, நத்தம் அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். மகன் கார்த்திக் 10, ஐந்தாம் வகுப்பு படித்தார்.
நேற்று முன்தினம் இரவுப்பணிக்கு யோகேஸ்வரி சென்றுவிட்டார். வீட்டின் மாடியில் இரும்பு கட்டிலில் கோபிக்கண்ணனும், கார்த்திக்கும் துாங்கினர்.
அப்போது கட்டிலின் போல்டு கழன்றதில் கட்டில் தரையில் சாய்ந்தது. தலைமாட்டில் இருந்த தடுப்பு கம்பி மடங்கி இருவரது கழுத்திலும் அழுத்தியது. இதில் இருவரும் மூச்சுத்திணறி இறந்தனர்.
மறுநாள் காலை கார்த்திக்கை காண அவனது மாமா மாடிக்கு சென்றார். அப்போது இருவரும் இறந்து கிடந்ததை பார்த்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

