/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டுத்தீயின் அகோரத்தை தெரிவிக்கும் பர்னிங் புஷ் 'பூ' கொடைக்கானலில் பூத்துக் குலுங்குது

ADDED : மார் 21, 2024 02:58 AM

கொடைக்கானல்: காட்டுத்தீயின் அகோரத்தை முன் கூட்டியே தெரிவிக்கும் பர்னிங் புஷ் பூ கொடைக்கானல் மலைப் பகுதியில் அதிகளவில் பூத்துள்ளது.
குளு, குளு நகரான கொடைக்கானலில் கோடை வெயிலின் தாக்கத்தின் போது இவ்வகை பூ பூத்துக் குலுங்கும். இவற்றால் காட்டுத்தீ,வெயிலின் தாக்கத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் இவற்றின் நிறம் அமைந்திருக்கும். நடப்பாண்டில் இவ்வகை பூ கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஏராளமாக பூத்துள்ளன.
இதற்கு தகுந்தார் போல் கடந்த வாரம் முதல் வன பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வகைப் பூ அழகு தாவரமாகவும் காட்டுத்தீயின் அகோரத்தை முன்கூட்டியே தெரிவிப்பதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.