/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லாரி மோதியதில் பள்ளத்தில் சென்ற பஸ் : லாரி கவிழ்ந்தது
/
லாரி மோதியதில் பள்ளத்தில் சென்ற பஸ் : லாரி கவிழ்ந்தது
லாரி மோதியதில் பள்ளத்தில் சென்ற பஸ் : லாரி கவிழ்ந்தது
லாரி மோதியதில் பள்ளத்தில் சென்ற பஸ் : லாரி கவிழ்ந்தது
ADDED : பிப் 11, 2024 01:19 AM

வேடசந்துார்: வேடசந்துாரிலிருந்து பள்ளபட்டி நோக்கி சென்ற அரசு பஸ்சின் பின் லாரி மோதியதில் பஸ் பள்ளத்திற்குள் சென்றதோடு லாரி கவிழ்ந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
வேடசந்துாரிலிருந்து அரசு பஸ் ஒன்று பள்ளபட்டி நோக்கி சென்றது. காலை 5:20 மணிக்கு புறப்பட்ட இந்த பஸ்சில் குன்னம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் 30, டிரைவராகவும், வேடசந்துாரை சேர்ந்த பிரபாகரன் 48, கண்டக்டராகவும் இருந்தனர். 13 பயணிகளுடன் புறப்பட்ட இந்த பஸ் ரங்கநாதபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்றது. அப்போது பின்னால் ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் குர்ஜர் 27, ஒட்டி வந்த லாரி மோதியதில் பஸ் கண்ணாடிகள் உடைந்து பஸ் பள்ளத்திற்குள் சென்றது.
மோதிய லாரியும் அதே இடத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் பயணித்த10 பேர் காயமடைந்தனர். பஸ் பள்ளத்துக்குள் சென்றபோது குமாரராஜன் வீட்டின் முன்பிருந்த செட் சேதமடைந்தது. கூம்பூர் எஸ்.ஐ., வேல்முருகன் விசாரிக்கிறார்.
தேவை பயிற்சி
அரசு , தனியார் டவுன் பஸ் ஓட்டுனர்கள் பஸ் நிறுத்தங்களில் நிற்கும்போது முன்னாள் செல்லும் வாகனத்தை முந்தி சென்று நிறுத்துகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகன ஒட்டிகள் நிலை தடுமாறி விபத்தை சந்திக்கின்றனர். இதுபோன்ற விபத்துக்கள் தொடர்வதால் அரசு ,தனியார் பஸ் ஓட்டுனர்களுக்கு முறையான பயிற்சி,ஆலோசனை வழங்க வட்டார போக்குவரத்து துறையினர் முன்வர வேண்டும்.