/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளிகளில் மத்தியரசின் மரம் நடுவோம் திட்டம்... முழுமையாக்கலாமே: காலாண்டு தேர்வு விடுமுறையால் அரைகுறை பணி
/
பள்ளிகளில் மத்தியரசின் மரம் நடுவோம் திட்டம்... முழுமையாக்கலாமே: காலாண்டு தேர்வு விடுமுறையால் அரைகுறை பணி
பள்ளிகளில் மத்தியரசின் மரம் நடுவோம் திட்டம்... முழுமையாக்கலாமே: காலாண்டு தேர்வு விடுமுறையால் அரைகுறை பணி
பள்ளிகளில் மத்தியரசின் மரம் நடுவோம் திட்டம்... முழுமையாக்கலாமே: காலாண்டு தேர்வு விடுமுறையால் அரைகுறை பணி
ADDED : செப் 27, 2025 04:35 AM

பழநி: திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளின் மூலம் மத்தியரசின் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை துவங்கியுள்ள நிலையில் பெற்றோர்கள, மாணவர்களுடன் இணைந்து இத்திட்டத்தை துரிதப்படுத்தி வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசின் மூலம் பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து வகை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் 'தாயின் பெயரில் மரக்கன்று திட்டம்' செயல்படுத்தப்பட்டது. இதில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும், தங்களின் வீட்டுத் தோட்டம் , பொது இடத்தில் ஒரு மரக்கன்று, செடி, நட்டு தனது தாயுடன் புகைப்படம் எடுத்து தங்கள் வகுப்பாசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை பள்ளி வகுப்பு ஆசிரியர்கள் https://ecoclubs.education.gov.in என்ற லிங்க் மூலம் பள்ளியின் யூ.டி.ஐ.எஸ்.சி எண்ணை உள்ளீடு செய்து அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள வகை செய்யப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் இத்திட்டத்தை பற்றிய அறிவுறுத்தல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி பலர் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். நுாறு சதவீத மாணவர்கள் இதனை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கான இறுதி நாள் செப். 30 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது நேற்று (செப். 26) காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் அலைபேசி மூலம் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி 100 சதவீதம் இத்திட்டத்தை முடிக்க செயல்பட்டு வருகின்றனர். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் முனைப்புடன் செயல்பட்டு ஒரு மரக்கன்று நட்டு புகைப்படம் எடுத்து மேலே குறிப்பிட்டுள்ள லிங்கில் பதிவேற்றம் செய்து கொண்டு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு பள்ளியின் யூ.டி.ஐ.எஸ்.சி.எண் தெரிந்து கொள்வது அவசியம். இத்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் குழந்தைகளின் தாயின் பெயரில் ஒரு மரம் வளர்ந்து நகரை பசுமையாக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு மாணவர்கள் ,பெற்றோர் மத்தியில் நல்லாதரவும் உள்ளது.
.........
வெற்றிக்கு முயற்சி
பள்ளி மாணவர்கள் மூலம் வீட்டுக்கு ஒரு மரம் தாயின் பெயரில் வளர்க்கும் திட்டம் மிகச்சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் பள்ளியில் 80 சதவீததிற்கும் மேல் நிறைவு செய்துள்ளனர். தற்போது அலைபேசி மூலம் பெற்றோர்களுக்கு அனுப்பி உள்ளோம். அவர்களும் விரைவில் புகைப்படங்களை எடுத்து எங்களுக்கு அனுப்புவர். இத்திட்டம் வெற்றி பெற அனைத்து பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் முயற்சி செய்ய வேண்டும்.
காசிஆறுமுகம், முதல்வர், விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, ஆயக்குடி.