ADDED : மார் 04, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: ஜி.நடுப்பட்டி கேத்தம்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி காளியம்மாள் 63. இவர் வேடசந்துார் கூவக்காபட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று மீண்டும் ஊருக்கு செல்ல வேடசந்துார் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் அரசு பஸ்சில் கூட்டத்தோடு கூட்டமாக முண்டியடித்து மூதாட்டி காளியம்மாள் ஏறினார்.
அப்போது காளியம்மாள்,கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது. வேடசந்துார் போலீசில் காளியம்மாள் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

