/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
48 கிலோ ரேஷன் பொருளை 50 கிலோவாக விற்பது எப்படி கொந்தளித்த கூட்டுறவு பணியாளர் சங்க செயலாளர்
/
48 கிலோ ரேஷன் பொருளை 50 கிலோவாக விற்பது எப்படி கொந்தளித்த கூட்டுறவு பணியாளர் சங்க செயலாளர்
48 கிலோ ரேஷன் பொருளை 50 கிலோவாக விற்பது எப்படி கொந்தளித்த கூட்டுறவு பணியாளர் சங்க செயலாளர்
48 கிலோ ரேஷன் பொருளை 50 கிலோவாக விற்பது எப்படி கொந்தளித்த கூட்டுறவு பணியாளர் சங்க செயலாளர்
ADDED : அக் 10, 2025 03:19 AM
வடமதுரை: ''கூட்டுறவு சங்கங்களுக்கு சப்ளையாகும் ஒரு மூடை ரேஷன் பொருள் எடை குறைந்து 48 கிலோவாக கிடைக்கும் போது எப்படி 50 கிலோவாக பொதுமக்களுக்கு விற்க முடியும் '' என தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் பி.ஏ.முருகேசன் கேள்வி எழுப்பினார் .
சம்பள உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வடமதுரையில் 4வது நாளாக நடந்த கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் அவர் பேசியதாவது:
புதிய நடைமுறையாக ரேஷன் கடை எடை மிஷினையும் ரேஷன் கார்டு பதிவு இயந்திரத்தை 'புளூ டூத்' முறையில் இணைக்கின்றனர். இதன்படி எடை மிஷனில் மிக சரியான அளவு இருந்தால் மட்டும் இயந்திரத்தில் பதிவிட்டு மக்களுக்கு சப்ளை செய்ய முடியும்.
அதே நேரம் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பும் இடங்களில் இதுபோன்ற முறையை பின்பற்ற மறுக்கின்றனர். மூடையின் எடை குறைந்து 50 கிலோவுக்கு பதிலாக 48 கிலோவே இருக்கிறது. 48 கிலோ பொருளை எப்படி 50 கிலோவாக பில் செய்ய முடியும். தாயுமானவர் திட்டத்தில் பொருள் சப்ளை வழங்க ஒரு கார்டுக்கு ரூ.40 தரப்படுகிறது. ஒரு கடைக்கு தாயுமானவர் திட்டத்தில் 100 கார்டுகள் இருந்தால் ஒரே நாளில் சப்ளை முடிக்க முடியாமல் மேலும் ஒரிரு நாட்கள் தேவைப்படுகிறது.
இதனால் ஏற்படும் கூடுதல் வாகன வாடகை செலவு குறித்து கேட்டால் அதிகாரிகள் தர மறுக்கின்றனர். இத்திட்டத்தில் பொருட்களை வழங்க செல்லும் போது அருகில் இருக்கும் மற்ற கார்டு தாரர்களும் இவ்வளவு துாரம் வந்து விட்டீர்களே. அப்படியே தங்களுக்கும் பொருட்களை வழங்கி செல்ல வேண்டியது தானே என பிரச்னை செய்கின்றனர் என்றார்.