/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலி 'டீ' தூள் பாக்கெட்டுகள் பறிமுதல்
/
போலி 'டீ' தூள் பாக்கெட்டுகள் பறிமுதல்
ADDED : அக் 10, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சென்னையை சேர்ந்தவர் குமாரவேல் 50. தனியார் தேயிலை துாள் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
வத்தலகுண்டில் உள்ள பல்பொருள் அங்காடியில் தரம் குறைந்த தேயிலைத்துாள்கள் ஏ.வி.டி., தேயிலை பாக்கெட்டுகள் பெயரில் போலியாக விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜப்லா, எஸ்.ஐ.,வைரவசுந்தரம் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியதில் போலி பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளரான வத்தலகுண்டை சேர்ந்த முகமது இப்ராகிமிடம் 40, விசாரிக்கின்றனர்.