sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குப்பையில் உணவு தேடும் உயிரினங்கள் பலியாகும் அபாயம்; ஜீரண பிரச்னையால் அல்லாடும் பரிதாபம்

/

குப்பையில் உணவு தேடும் உயிரினங்கள் பலியாகும் அபாயம்; ஜீரண பிரச்னையால் அல்லாடும் பரிதாபம்

குப்பையில் உணவு தேடும் உயிரினங்கள் பலியாகும் அபாயம்; ஜீரண பிரச்னையால் அல்லாடும் பரிதாபம்

குப்பையில் உணவு தேடும் உயிரினங்கள் பலியாகும் அபாயம்; ஜீரண பிரச்னையால் அல்லாடும் பரிதாபம்

1


UPDATED : பிப் 23, 2026 01:42 PM

ADDED : ஜன 14, 2026 06:28 AM

Google News

UPDATED : பிப் 23, 2026 01:42 PM ADDED : ஜன 14, 2026 06:28 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வனப்பகுதி அருகே வீசப்படும் குப்பையில் உணவு தேடும் வன உயிரினங்கள் ஜீரண பிரச்னையால் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகள் ஏராளமாக உள்ளன.இதில் சுற்றுலா,ஆன்மிகம் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.கொடைக்கானல், பழநி புல்லாவெளி, பரப்பலாறு, நத்தம்,சிறுமலை,ஆடலுார், பன்றிமலை,தடியன்குடிசை உள்ளிட்ட பகுதிகள் மலை சார்ந்து சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுள்ளன. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இதில் குறிப்பாக பழநி, கொடைக்கானலுக்கு வருகை தரும் பயணிகள் ரோட்டோர வனப்பகுதி மார்க்கமாகவே வாகனங்களில் வருகின்றனர். இப்பகுதிகளில் முறையான குப்பை தொட்டிகள் இல்லாத நிலை உள்ளது. பயணிகள், பொதுமக்கள்

வனப்பகுதியில் பிளாஸ்டிக் பைகளான உணவு பொட்டலங்களை வீசி செல்கின்றனர். இதிலிருந்துஉணவுகளை தேடும் வன உயிரினங்கள் பிளாஸ்டிக் பைகளு டன் உண்ணுவதால் ஜீரணப் பிரச்னை ஏற்பட்டு பலியாகின்றன.இதில் குரங்கு, காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் அடங்கும்.

மேலும் சுற்றுலா பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளும் உணவுகளை பிளாஸ்டிக் பைகளுடன் உண்ணும் நிலை உள்ளது. இவைகளும் ஜீரண பிரச்னைகள் ஏற்பட்டு அவ்வப்போது பலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மலை சார்ந்த ரோடுகளில் உணவுப் பொட்டலங்களை வீசுவதால் இது போன்ற அசாதாரண நிலை ஏற்படுகிறது.

வன உயிரினங்கள் பலியாவதை கருதி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வன உயிரினங்களையும், கால்நடைகளையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us