
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:தொடர் விடுமுறை முடிந்த நிலையில் கொடைக்கானலில் சிலநாட்களாக பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
சுதந்திர தினத்தை அடுத்து தொடர்ந்து விடுமுறையால் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதியடைந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரையன்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, வன சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக் , மன்னவனுார் சூழல் சுற்றுலா தலம், ஏரி உள்ளிட்டவை பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி உள்ளது. எப்போதும் பயணிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் ஏரிச்சாலையிலும் இதே நிலை நீடித்தது.

