/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அலைபேசியில் பேசியபடி பஸ்சை இயக்கிய டிரைவர்
/
அலைபேசியில் பேசியபடி பஸ்சை இயக்கிய டிரைவர்
ADDED : மே 21, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி; தாண்டிக்குடி மலைப்பகுதியில் அலைபேசியில் பேசியபடி பஸ் இயக்கிய டிரைவரால் பயணிகள் அச்சமடைந்தனர்.
தாண்டிக்குடி பண்ணைக்காடு இடையே நேற்று காலை சென்ற அரசு பஸ் டிரைவர் அலைபேசியில் பேசியபடி பஸ்சை இயக்கினார். இதை பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதை தொடர்ந்து பஸ்சை இயக்கிய டிரைவர் ராஜேஷ் கண்ணனிடம் நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது.
கிளை மேலாளர் நாகபாரதி கூறுகையில்,''மலைப்பகுதியில் அலைபேசியில்பேசியபடி பஸ் இயக்கிய டிரைவர் குறித்து வீடியோ வந்துள்ளது. அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.