/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தவறவிட்ட பணத்தை வழங்கிய டிரைவர், கண்டக்டர்
/
தவறவிட்ட பணத்தை வழங்கிய டிரைவர், கண்டக்டர்
ADDED : பிப் 08, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் ரூ 60 ஆயிரத்தை தவறவிட்ட பெண்ணிடம் பணத்தை ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர் ,கண்டக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
பழநியில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் அழகாபுரி சேர்ந்த காளிமுத்து மனைவி கலையரசி 47, நேற்று முன்தினம் சென்றார். ரூ. 60 ஆயிரத்தை தவறவிட்டார். கிளை அலுவலகத்தில் புகார் அளித்தார் . பஸ் டிரைவர் ஈஸ்வரன், கண்டக்டர் சத்தியமூர்த்தி ஆகியோர் கிளை மேலாளர் ஜெயக்குமாரிடம் ரூ.60 ஆயிரத்தை ஒப்படைத்தனர். கிளை மேலாளர் பணத்தை தவறவிட்ட பெண்ணை அழைத்து பணத்தை வழங்கினார்.