/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் உயிர் தப்பிய விவசாயி
/
கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் உயிர் தப்பிய விவசாயி
கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் உயிர் தப்பிய விவசாயி
கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் உயிர் தப்பிய விவசாயி
ADDED : நவ 11, 2024 04:44 AM
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே வயலில் உழுதுகொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கிணற்றுக்குள் பாய்ந்ததில் விவசாயி பழனியப்பன் உயிர் தப்பினார்.
பாளையம் பேரூராட்சி சேவகவுண்டன் புத்துாரைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் 60.
இவர் தனது வயலில் நெல் நடவு செய்ய டிராக்டர் மூலம் உழும் பணியில் ஈடுபட்டார்.
கிணற்று அருகே நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது டிராக்டர் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. சுதாரித்த பழனியப்பன் டிராக்டரிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.
கீழே குதித்ததில் பழனியப்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையில் வீரர்கள் கிணற்றில் விழுந்த டிராக்டரை கிரேன் வைத்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.