/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரரின் தந்தை
/
கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரரின் தந்தை
கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரரின் தந்தை
கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரரின் தந்தை
ADDED : டிச 10, 2024 05:42 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ராணுவ வீரரின் தந்தையை போலீசார் மீட்டனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மனு கொடுக்கும் இடத்திற்கு கையில் பையுடன் வந்த ஒருவர் பையிலிருந்த பெட்ரோல் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாார் தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில் அம்மையநாயக்கனுாரை அடுத்த காமலாபுரத்தை சேர்ந்த விவசாயி செபஸ்தியார் 55, என்பது தெரியவந்தது.
இவருடைய மகன் அருண் வெனிஸ் 23 ,ஹரியானாவில் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
செபஸ்தியாருக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ரோடு விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினர் கையகப்படுத்தி உள்ளனர்.
மீதமுள்ள நிலம் செபஸ்தியாரின் பெயருக்கு மாற்றாமல் அரசு பெயரிலே உள்ளது.
இதோடு இவரது தோட்டத்துக்கு செல்லும் பாதையை உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
இப்பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் 6 ஆண்டாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த செபஸ்தியார் கலெக்டர் அலுவலகம் வந்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
அவரை எச்சரித்த போலீசார் கலெக்டரிடம் சென்று பிரச்னை குறித்து மனு கொடுக்க வைத்தனர். இதன் பின் அவரை விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீசார் அழைத்து சென்றனர்.