/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரேக் பிடிக்காத அரசு பஸ்கள் தோப்பு, கடையில் புகுந்தது
/
பிரேக் பிடிக்காத அரசு பஸ்கள் தோப்பு, கடையில் புகுந்தது
பிரேக் பிடிக்காத அரசு பஸ்கள் தோப்பு, கடையில் புகுந்தது
பிரேக் பிடிக்காத அரசு பஸ்கள் தோப்பு, கடையில் புகுந்தது
ADDED : நவ 04, 2024 03:49 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்திற்கு நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, அரசு பஸ் ஒன்று பயணியருடன் வந்தது. பரளிபுதுார் சுங்கச்சாவடி அருகே பிரேக் பழுதால் பஸ் நின்றது. பயணியர் இறக்கி விடப்பட்டனர். பஸ்சை, நத்தம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு எடுத்து சென்ற போது, அருகில் இருந்த புளியந்தோப்புக்குள் புகுந்து மரத்தில் மோதி நின்றது.
இதேபோல, நேற்று அதிகாலை, 5:40 மணிக்கு நத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து சின்ன காசம்பட்டிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் வெளியே சென்ற போது பிரேக் பிடிக்காததால் அங்கிருந்த மெடிக்கல் ஷாப்புக்குள் பஸ் புகுந்தது. இதில், கடையின் முன்பகுதியில் இருந்த இரும்பு போர்டுகள், பஸ்சின் முன்பக்கம் முழுதும் சேதமடைந்தது. இரு சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை.
நேற்று மாலை நத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து திண்டுக்கல் நோக்கி புறப்பட்ட அரசு பஸ், சிறிது நேரத்திலேயே சேர்வீடு பிரிவு பகுதியில் பழுதாகி நடுவழியில் நின்றது. அதில் பயணித்த 50க்கு மேற்பட்ட பயணியர் நடுரோட்டில் இறக்கி விடப்பட்டனர்.