/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்டவாளத்தில் கல் வைத்த பிரச்னை; 'டவர் டம்ப் லொகேஷன் 'நடவடிக்கை
/
தண்டவாளத்தில் கல் வைத்த பிரச்னை; 'டவர் டம்ப் லொகேஷன் 'நடவடிக்கை
தண்டவாளத்தில் கல் வைத்த பிரச்னை; 'டவர் டம்ப் லொகேஷன் 'நடவடிக்கை
தண்டவாளத்தில் கல் வைத்த பிரச்னை; 'டவர் டம்ப் லொகேஷன் 'நடவடிக்கை
ADDED : பிப் 22, 2024 06:17 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைரோடு அருகே ரயில்வே தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைத்த விவகாரம் தொடர்பாக' டவர் டம்ப் லொகேஷன்' நடவடிக்கைக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் சைபர் கிரைம் போலீசிடம் பரிந்துரை செய்துள்ளனர்.
நாகர்கோவில்-சென்னை தாம்பரம் வரை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் பிப்.11ல் நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு இரவு 8:40 மணிக்கு திண்டுக்கல் வந்தது. கொடை ரோடு அருகே ரயில் வந்தபோது தண்டவாளத்தில் சிமென்ட் கல் இருந்தது. இதை பார்த்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தி கல்லை அகற்றினார். திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர்கள் துாயமணி வெள்ளை சாமி,சுனில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக இைதயொட்டிய கிராம பகுதி மக்களிடம் விசாரணை நடந்தது. விசாரணையில் விடுமுறை நாள் என்பதால் பள்ளி மாணவர்கள் யாரேனும் வைத்திருக்கலாம் என தெரிந்தது.
கிராம மக்களிடம் போலீசார் தரப்பில் எச்சரிக்கை,விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதோடு பிப்.11ல் இரவு சம்பவம் நடந்த பகுதியில் யார் யார் நடமாடினார்கள் என அவர்கள் பயன்படுத்திய அலைபேசி சிம்கார்டுகளை வைத்து கண்டு பிடிக்கும் வகையில் டவர் டம்ப் லெகேஷன் நடவடிக்கைக்கு திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாரிடம் ரயில்வே போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.