/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் துவங்கியது கந்த சஷ்டி விழா ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
/
பழநி முருகன் கோயிலில் துவங்கியது கந்த சஷ்டி விழா ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
பழநி முருகன் கோயிலில் துவங்கியது கந்த சஷ்டி விழா ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
பழநி முருகன் கோயிலில் துவங்கியது கந்த சஷ்டி விழா ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
ADDED : நவ 03, 2024 03:16 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் நேற்று திரண்டு தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கோயில் யானை கஸ்துாரி யானைப்பாதை வழியாக கோயில் வந்தது. தொடர்ந்து நேற்று மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது. விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி, தேய்வானை, துவாரபாலகர்கள், மயில் வாகனம், நவவீரர்களுக்கு அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் மதியம் 1:00 மணிக்கு மேல் காப்பு கட்டப்பட்டு விழா துவங்கியது.
பழநியாண்டவர் கலை அறிவியல் கல்லுாரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பரம், தங்கரத புறப்பாடு நடந்தது. வெளி மாநில, வெளியூர், உள்ளூர் என ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷங்களுடன் முருகனை தரிசித்தனர். ரோப்கார் பராமரிப்பு பணியால் செயல்படாததால் பக்தர்கள் வின்ச் மூலம் செல்ல நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். மேலும் கோயிலில் மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருஆவினன்குடி கோயிலில் மூலவர், உற்ஸவருக்கு காப்பு கட்ட பக்தர்கள் விரதம் துவக்கினர்.
ஆறாம் நாளான நவ.,7ல் முருகன் கோயிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனம், விளாபூஜை, மதியம் உச்சிக்கால பூஜை, சாயரட்சை பூஜையையடுத்து மதியம் 3:10 மணிக்கு மேல் மலைக்கொழுந்து அம்மன் சன்னதியில் பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்கு பின்
தொடர்ச்சி ௩ம் பக்கம்