ADDED : செப் 28, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி, : -சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் மில்மேடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகோபால் 69. இதேபகுதியைச் சேர்ந்த சங்கிலித்துரை 23, தினமும் குடிபோதையில் ராஜகோபாலிடம் தகராறு செய்தார். சாணார்பட்டி போலீசார் சங்கிலித்துரையை எச்சரித்தனர். இதன் ஆத்திரத்தில் சங்கிலித்துரை ராஜகோபால் வீட்டிற்குள்
நுழைந்து தாக்கினார். எஸ்.ஐ., சுப்ரமணி தலைமையிலான போலீசார் சங்கிலித்துரையை கைது செய்தனர்.