sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்தி சில வரிகளில் ...

/

செய்தி சில வரிகளில் ...

செய்தி சில வரிகளில் ...

செய்தி சில வரிகளில் ...


ADDED : பிப் 04, 2024 04:10 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சைக்கிள் வழங்கும் விழா

வடமதுரை: அய்யலுார் அரசு மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு படிக்கும் 191 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மனோகரி முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேன்மொழி வரவேற்றார். பி.டி.ஏ., பொறுப்பாளர்கள் ஆறுமுகம், சம்சுதீன், கவுன்சிலர் செல்லமுத்து, தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ், நகர வர்த்தக அணி அமைப்பாளர் கருணாமூர்த்தி பங்கேற்றேனர்.

12 டூவீலர்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்தப்படும் ரேக்குகளில் டூவீலர்களை அதிகமானோர் நிறுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ஆய்வு செய்தனர். பஸ் நிறுத்தப்படும் ரேக்குளில் நிறுத்தப்பட்டிருந்த 12 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர்களிடம் இனி வாகனங்களை பஸ் ஸ்டாண்டில் நிறுத்தமாட்டேன் என உறுதிமொழி பெற்று கொண்டு டூவீலர்களை ஒப்படைத்தனர்.

ஆன்லைன் அளவை;கலெக்டர் தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவிட சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். நில அளவை கட்டணத்தையும் இணைய வழியிலே செலுத்தலாம். அதன் விபரங்கள் மனுதாரருக்கு அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். பணி முடிந்த பின் https://eservices.tn.gov.in/ என்ற இணையத்தின் வாயிலாக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். தமிழக அரசு துவங்கிய இந்த நவீன சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் பூங்கொடி கேட்டுள்ளார்.

பாதுகாப்பு கோரி துணைத்தலைவர் மனு

திண்டுக்கல் : வெள்ளோடு ஊராட்சி துணைத்தலைவர் சாலினி ஹெர்மினி திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் கொடுத்த மனுவில், என் குடும்பத்திற்கும் முன்னாள் ஊராட்சி தலைவி குடும்பத்திற்கும் முன் விரோதம் உள்ளது. இதன் காரணமாக 2021ல் என் வீட்டு முன் நிறுத்தியிருந்த டூவீலரை எரித்தனர். இதன்வழக்கு நிலுவையில் உள்ளது. பிப்.1ல் நான் சின்னாளப்பட்டிக்கு சென்ற போது எதிர்தரப்பினர் வழிமறித்து இழிவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். என் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க.,வில் மாற்றுக் கட்சியினர்

ஒட்டன்சத்திரம் :உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் லெக்கையன்கோட்டையை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 100க்கு மேற்பட்டோர் தி.மு.க., வில் இணைந்தனர். ஒன்றிய செயலாளர் தர்மராஜ், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, கவுன்சிலர் சண்முகம், ஊராட்சி தலைவர் செல்லம்மாள் உடன் இருந்தனர்.

18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

திண்டுக்கல் ; மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் ராமச்சந்திரன்,சுகாதார ஆய்வாளர்கள் லீலாபிரியா,செல்வராணி,காமராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் கோட்டைக்குளம் ரோடு,மெயின்ரோடு,மேற்கு ரதவீதிகளில் சோதனை நடத்தினர். அப்போது 6 கடைகளில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.8000 அபராதம் விதித்தனர்.

219 மாணவிகளுக்கு சைக்கிள்

கோபால்பட்டி:கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வேம்பார்பட்டி ஊராட்சி தலைவர் கந்தசாமி வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அழ. பாலகுரு, தலைமை ஆசிரியர் மரியாள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் புதிய கட்சி அறிவிப்பு கொண்டாட்டம் பஸ்ஸ்டாண்டில் மாவட்ட தலைவர் தர்மா தலைமையில் நடந்தது. தமிழக வெற்றி கழகம் வாழ்க என கோஷமிட்டபடி நடிகர் விஜய் படம் பொறித்த வெள்ளை கொடியை ஏந்தி சென்றனர். ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தானம் அறக்கட்டளை சார்பில் புதிய சமூக நெறியை நோக்கி என்ற தலைப்பில் வாக்கத்தான் 2024 ஊர்வலம் நடந்தது. ஆ.டி.ஓ., கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். ஓய்.எம்.ஆர். , பட்டி, குமரன் திருநகர் வழியாக ஜி.டி.என்., ரோட்டில் உள்ள லயன் கிளப்பை வந்ததடைந்தது. அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நத்தம் கோயில் உண்டியல் வசூல்

நத்தம்:- நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா பிப். 12ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று கோயில் வளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. பக்தர்கள் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 918 கிடைத்தது. கோயி் செயல் அலுவலர் சூரியன், ஆய்வாளர் செல்வம், திருக்கோவில் பூசாரிகள், வங்கி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொழிற்பிரிவு தேர்வுக்கு வாய்ப்பு

திண்டுக்கல் :கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017--2019-ல் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்துகொள்ள இயலாத, தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு நடத்தப்பட உள்ளது. முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை பிப். 15 ம் தேதிக்குள் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக்கட்டணத்தை செலுத்தி வாய்ப்பினை பயன்படுத்தி துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு http://skilltraining.tn.gov.in, https://ncvtmis.gov.inல் அணுகலாம்

கொடியேற்று விழா

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் கொடியேற்று விழா நடந்தது சங்க மாவட்ட தலைவர் அமாவாசை தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயமணி கொடியேற்றினார். நிர்வாகிகள் ராஜம்மாள், ஸ்ரீ ராஜூ, பிச்சையம்மாள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us