நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தெரசா பல்கலையில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் வரலட்சுமி,சங்கர், உதவி கோட்ட பொறியாளர்கள் சாந்தினி, ராஜன், உதவி பொறியாளர்கள்சரவணன், ராமமூர்த்தி,காவிய மீனா, ஐஸ்வர்யா கலந்து கொண்டனர். மூஞ்சி கல்லில் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. சாலை விதிகளை கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

