ADDED : பிப் 04, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி
ஒட்டன்சத்திரம் :ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல்,நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக மகளிர் சுய உதவி குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலர் அன்சாரி தலைமை வகித்தார். நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் செயலாளர் பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர் தேவதாஸ், நுகர்வோர் மையம் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார், நுகர்வோர் மையத் தலைவர் சுப்பிரமணியன் பயிற்சி அளித்தனர். மகளிர் குழு ஆனந்தி நன்றி கூறினார்.