/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடுத்தவர் வீட்டில் துாக்கிட்டு இறப்பு
/
அடுத்தவர் வீட்டில் துாக்கிட்டு இறப்பு
ADDED : அக் 13, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி,: சின்னாளபட்டி வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணி 62. இவரது மனைவி சந்திரா 48. மனநோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
சின்னாளபட்டி அரசு சமுதாய நல மையத்தில் மாத்திரை வாங்குவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதே பகுதியில் உள்ள பாஸ்கர் வீட்டில் சேலையில் துாக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். பாஸ்கர் குடும்பத்துடன் கோவையில் உள்ள நிலையில் வீட்டின் முன்புற கதவு பூட்டப்பட்டு இருந்தது. பின்புற கதவு திறந்து கிடந்தது. சந்திராவின் உடலை மீட்ட சின்னாளபட்டி போலீசார் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.