ADDED : நவ 13, 2024 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : தேர்தல் வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,பணி ஓய்வுப் பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. திண்டுக்கல் - திருச்சி ரோடு அருகே நடைபெற்ற இதற்கு சங்க மாவட்டத் தலைவர் ராமு தலைமை வகித்தார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.