/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெயர்ந்து வரும் பேவர் பிளாக் கற்கள் திண்டுக்கல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
/
பெயர்ந்து வரும் பேவர் பிளாக் கற்கள் திண்டுக்கல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
பெயர்ந்து வரும் பேவர் பிளாக் கற்கள் திண்டுக்கல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
பெயர்ந்து வரும் பேவர் பிளாக் கற்கள் திண்டுக்கல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : டிச 15, 2024 05:44 AM

திண்டுக்கல்: பெயர்ந்து வரும் பேவர் பிளாக் கற்கள் என திண்டுக்கல் மாநகராட்சி 8 வது வார்டில் மக்கள் பாதிக்கும் நிலை தொடர்கிறது.
சுபேதார் தெரு, காளிமுத்து பிள்ளை சந்து, ராமசாமிபுரம், அஜித்சாயபு சந்து, நாட்டாமைக்கார சந்து, நாயக்கர்புதுார் மூன்று தெருக்கள், மூக்கன் ஆசாரி தெருக்களை உள்ளடக்கிய இந்த வார்டில் காளிமுத்து பிள்ளை சந்து, ராஜிவ் காந்தி தெரு, மூக்கன் ஆசாரி சந்து பகுதிகளில் குப்பையை பொதுமக்கள் சாக்கடையில் கொட்டுவதால் கழிவு நீர் தேக்கம் ஏற்படுகிறது.
துார்வாரினாலும் மீண்டும் இதே தான் நடக்கிறது. மாதக்கணக்கில் கழிவு நீர் தேங்கி நோய்தொற்று அபாயம் உள்ளது. குறுக்கு தெருக்களில் உள்ள பேவர்பிளாக் ரோடுகள் ஆங்காங்கே பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக ராஜிவ்காந்தி தெருவில் சாக்கடை தேங்கி நிற்கிறது. ரோடுகள் சிதலமைடந்துள்ளன. வார்டு பகுதிகளில் சில இடங்களில் பாதாள சாக்கடை திட்ட இணைப்புகள் முழுமையாகாமல் உள்ளது. தெருநாய்கள், கால்நடைகள் அதிகமாகயிருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வசதியற்ற சூழல்
சித்ரா, குடும்ப தலைவி: குறுக்கு தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் சென்று வர சிரமமாக உள்ளது.கழிவு நீர் தேக்கத்தால் மக்களாகிய நாங்கள்தான் பாடாய்படுகிறோம். இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை
சந்தோஷ், ராமசாமிபுரம் : தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனத்தில் சிறிது கவனம் சிதறினாலும் தெருநாய்களின் குறுக்கீட்டால் விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துார்வாருங்க
சுகுமார், ராஜிவ் காந்தி தெரு : சாக்கடைகளில் மண் அள்ளப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன. மாநகராட்சியின் முதல்கட்ட நடவடிக்கையாக சாக்கடைகளை துார்வாரி கழிவுநீர் வெளியேற பாதை அமைத்து தர வேண்டும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்தொற்றுக்கு ஆளாகி மிகுந்த சிரமப்படுகின்றனர்.
விழிப்புணர்வு இல்லை
ஆனந்த், கவுன்சிலர், (தி.மு.க.,): வார்டில் சாக்கடை கழிவுகளை அவ்வப்போது அகற்றி வருகிறோம். பொதுமக்கள் சிலர் கழிவுநீர் ஓடையிலே குப்பையை கொட்டி விடுகின்றனர். நாய்கள், மாடுகள் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சொந்த செலவில் பேவர் பிளாக் ரோடு உள்ளிட்டவை செய்து வருகிறோம். பொதுமக்களிடமும் விழிப்புணர்வு தேவை.அதோடு ஒத்துழைப்பு அவசியம் என்றார்.