ADDED : செப் 27, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் 24. இவர் 4 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் ஊர்க்காவல் படையில் வீரராக பணியாற்றினார். அதன்பின் வேலைக்கு வராமல் தற்போது டிரைவராக உள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தமிழ்வாணன், தன்னுடன் ஊர்க்காவல் படையில் பணியாற்றிய 7 பெண்களின் 'வாட்ஸ் ஆப்'பிற்கு ஆபாச புகைப்படம்,வீடியோக்களை அனுப்பினார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் திண்டுக்கல் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி,எஸ்.ஐ.,வனிதா தலைமையிலான போலீசார் தமிழ்வாணனை கைது செய்தனர்.

