/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடியவர் கைது பொருத்தியவரே சிக்கினார்

ADDED : ஆக 09, 2025 01:57 AM
வேடசந்தூர்:வேடசந்துார் அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவற்றை பொருத்திக் கொடுத்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருமாதம் கழித்து அவற்றை திருடிச் சென்றதால் கைதானார்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சாலையூர் அரசு துவக்கப்பள்ளிக்கு அரசு சார்பில் புதிதாக கம்ப்யூட்டர், லேப்டாப், சி.சி.டி.வி., உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவற்றை பொருத்துவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி, தனக்குத் தெரிந்த திண்டுக்கல் ஏ.வெள்ளோடு கரடிபட்டியைச் சேர்ந்த பிரான்சிஸ் பிரவீன் 29, என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை அழைத்து வந்தார். அந்தப்பள்ளி ரோட்டோரம் தனியாக இருப்பதால் அவற்றை திருட அவர் திட்டம் தீட்டியுள்ளார். ஜூலை மாதம் 27ம் தேதி இரவில் பள்ளி யின் கதவை உடைத்து உள்ளே சென்றவர் கம்ப்யூட்டர் , லேப்டாப், சி.சி.டி.வி., கேமரா உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலானவற்றை திருடிச் சென்றார். இதுகுறித்து விசாரித்த வேடசந்துார் டி.எஸ்.பி., பவித்ரா உத்தரவில் பிரான்சிஸ் பிரவீனை போலீசார் கைது செய்தனர்.