/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தற்கொலை எண்ணத்தில் சிறுவன் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்
/
தற்கொலை எண்ணத்தில் சிறுவன் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்
தற்கொலை எண்ணத்தில் சிறுவன் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்
தற்கொலை எண்ணத்தில் சிறுவன் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்
ADDED : பிப் 08, 2024 09:22 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 3வது பிளாட்பாரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்த மதுரை சிறுவனை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த சிறுவன் ௧௫ வயது. இவரது தாய் சிறு வயதிலேயே இறந்தார்.
தந்தையும் போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் சிறுவன், ஆதரிப்போர் யாரும் இல்லாததால் தற்கொலை செய்யும் நோக்கத்தில் தன் வீட்டிலிருந்து நேற்று திருநெல்வேலியிருந்து மதுரை,திண்டுக்கல் வழியாக திருச்சி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரையிலிருந்து ஏறி திண்டுக்கல்லில் இறங்கினார்.
பின் எங்கு செல்வது என தெரியாமல் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் 3வது பிளாட்பாரத்தில் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். இதை பார்த்த ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி,கிரைம் போலீசார் ராஜா,நாகராஜ், முத்துப்பாண்டி, மதன், எஸ்.ஐ.,மாரியப்பன் உள்ளிட்டோர் சிறுவனை மீட்டனர்.
பின் நடந்த விசாரணையில் சிறுவன் தன் நிலையை போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் திண்டுக்கல் குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் கொடுத்து சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

