ADDED : டிச 09, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் புடலங்காய் விலை கிலோவிற்கு ரூ.5 அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் குட்டை ,நெட்டை ரகம் புடலங்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது.
10 நாட்களுக்கு முன்பு வரத்து அதிகமாக இருந்ததால் ஒரு கிலோ நெட்டை ரக புடலை ரூ.12க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து மழை பெய்து விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது.
நேற்று ஒரு கிலோ புடலை ரூ. 17க்கு விற்பனை ஆனது.
இதேபோல் பத்து நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.17 க்கு விற்ற குட்டை ரக புடலங்காய் நேற்று ரூ.22 க்கு விற்பனையானது.