/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரு நாளில் இரட்டிப்பான வெண்டைக்காய் விலை
/
இரு நாளில் இரட்டிப்பான வெண்டைக்காய் விலை
ADDED : அக் 05, 2024 04:35 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை இருநாட்களில் இரட்டிப்பாகி கிலோ ரூ.20க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார் சுற்றுப் பகுதிகளில் வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது.
ஓணத்தை முன்னிட்டு கேரள வியாபாரிகள் வெண்டைக்காயை அதிகம் கொள்முதல் செய்ததால் ஒரு கிலோ வெண்டைக்காய் அதிகபட்சமாக ரூ.40 க்கு விற்பனை ஆனது. ஓணம் முடிந்ததும் விலை சரிவடைந்து பல நாட்களாக கிலோ ரூ.5க்கு விற்பனையானது.
இந்த விலை வெண்டைக்காயை செடிகளில் இருந்து பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்பதால் விவசாயிகள் விரக்தியில் இருந்தனர்.
இந்நிலையில் சில நாட்களாக வரத்து குறைவால் வெண்டைக்காய் விலை ஏற்றம் அடைந்து காணப்பட்டது. அக்., 1ல் கிலோ ரூ.10க்கு விற்ற வெண்டைக்காய் அக்.,3ல் இரட்டிப்பாகி ரூ.20 க்கு விற்றது. நேற்று இதன் விலை மேலும் அதிகரித்து ரூ.23க்கு விற்பனையானது.
கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில், இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் குறையும் என்பதால் விலை அதிகரிக்கும் என்றார்.