/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் விலை உயர்ந்த புடலை 10 நாளில் கிலோ ரூ.5 லிருந்து ரூ.18 ஆக அதிகரிப்பு

ADDED : மார் 18, 2025 05:25 AM
ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் புடலங்காய் விலை உயர்ந்து பத்தே நாளில் கிலோ ரூ.5 லிருந்து ரூ.18 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை சுற்றிய பகுதிகளில் புடலை அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
பத்து நாட்களுக்கு முன்பு பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக இருந்தது. அதனால் ஒரு கிலோ ரூ.5 லிருந்து ரூ.7 வரை விற்பனையானது.
தற்போது அறுவடை குறைந்ததால் மார்க்கெட்டிற்கு புடலை வரத்து 40 சதவீதமாக குறைந்தது. இதனால் விலை உயர்ந்து ரூ.18க்கு விற்பனை ஆனது.
வியாபாரி ஒருவர் கூறுகையில், இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் குறைய வாய்ப்புள்ளதால் விலை அதிகரிக்கும் என்றார்.