ADDED : ஆக 21, 2024 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல், : கொடைக்கானலில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இரு வாரங்களாக பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் இருந்த நிலையில் மதியம் மழை பெய்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தன. மழையால் ஏரி சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கின.
மேல்மலை பகுதிகளான மன்னவனுார் பூண்டி,கவுஞ்சி , கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காட்டிலும் கனமழை கொட்டியது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.

