/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடியிருப்பை சூழ்ந்த மழை நீர்; விளை நிலங்களையும் விட்டு வைக்கல
/
குடியிருப்பை சூழ்ந்த மழை நீர்; விளை நிலங்களையும் விட்டு வைக்கல
குடியிருப்பை சூழ்ந்த மழை நீர்; விளை நிலங்களையும் விட்டு வைக்கல
குடியிருப்பை சூழ்ந்த மழை நீர்; விளை நிலங்களையும் விட்டு வைக்கல
ADDED : டிச 15, 2024 08:55 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக செல்லப்பகவுண்டன்புதுார் பகுதியில் உள்ள குடியிருப்புகள், விளை நிலங்கள் நீரில் மூழ்கின.
ஒட்டன்சத்திரம் நகராட்சி இரண்டாவது வார்டு செல்லப்பகவுண்டன்புதுாரில் தோட்டத்து வீடுகள் அதிகம் உள்ளன. விவசாயிகள் இந்த வீடுகளில் தங்கி விவசாயம் செய்து வருகின்றனர். விளைநிலங்களில் வெள்ளை சோளம்,மக்காச்சோளம் நடவு செய்திருந்தனர்.
பயிர்கள் முளைத்து வந்த நிலையில் மூன்று நாட்களாக பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் விளைநிலம், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சோளப்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. மழை நீர் வடிவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும் என்பதால் அதுவரை காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயி சண்முகவேல் கூறியதாவது: மழைக்காலத்தில் இந்த பாதிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.மழை நீர் வடிவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். போதிய வடிகால் அமைத்து மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.